முதன்முறையாக சர்வதேச தரத்தில் 6 பாடப்பிரிவுகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் : யூஜிசி
முதன்முறையாக சர்வதேச தரத்தில் வரலாறு, வர்த்தகம் உள்ளிட்ட 6 பாடப் பிரிவுகளுக்கு புதிய பாடத்திட்டத்தினை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டு உள்ளது.
உயர் கல்வி மாணவர்களின் இணைய வழி கல்வி கற்றலை ஊக்குவிக்கவும், கற்பித் தல் திறனை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ளவும் வகை செய்ய துவக்கப்பட்ட "ஸ்வயம்" என்ற திட்டத்தின் கீழ் ‘ஆர்வத் தின் வெளிப்பாடு’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, முதற் கட்டமாக, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பாடப் பிரிவின் கீழ் வரலாறு, அரசியல் அறிவியல், வர்த்தகம், சமூகவியல், பொது மேலாண்மை மற்றும் மானுடவியல் ஆகிய 6 பாடங்களுக்கு சர்வதேச தரமிக்க பாடத்திட்டம் வெளியிடப் பட்டு உள்ளது.
இந்த பாடத் திட்டத்தை பயில விரும்பும் மாணவர்கள் swayam.gov.inswayam.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Comments