மாநிலங்களவையில் 14ஆம் தேதி கட்டாயம் இருக்க பாஜக எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு

0 1434
மாநிலங்களவையில் 14ஆம் தேதி கட்டாயம் இருக்க பாஜக எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு

மாநிலங்களவை பாஜக எம்பிக்களுக்கு வரும் 14ஆம் தேதி கட்டாயம் அவையில் இருக்க வேண்டுமென கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 14ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் முதல்நாளன்று மாநிலங்களவையில புதிய துணைத் தலைவரை தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் பாஜக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஹரிவன்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாஜக தரப்பில் தீவிரமாக ஆதரவு திரட்டப்பட்டு வரும் நிலையில், இந்த கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments