நடிகை ரியா மற்றும் சகோதரரின் ஜாமின் மனு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணை

0 1678
நடிகை ரியா மற்றும் அவரது சகோதரரின் ஜாமின் மனு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.

நடிகை ரியா மற்றும் அவரது சகோதரரின் ஜாமின் மனு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.

மறைந்த நடிகர் சுஷாந்த்திற்கு போதைப் பொருள் வாங்கிக் கொடுத்தது தொடர்பான வழக்கில், 3 நாள் விசாரணைக்குப் பின் அவரது காதலியும் நடிகையுமான ரியாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் மும்பையின் பைகுல்லா சிறையில் ரியா  அடைக்கப்பட்டுள்ளார். ஜாமின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஏற்கனவே அவரது தம்பி ஷோவிக் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். ஜாமின் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்கள், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருப்பதாக அவர்களது வழக்கறிஞர் தெரவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments