கேரள தங்க கடத்தல் வழக்கில் சிபிஎம் மாநில செயலர் மகனிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை

0 1376
கேரள தங்க கடத்தல் வழக்கில், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷிடம்((Bineesh)) அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள தங்க கடத்தல் வழக்கில்,  மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பினீஷை கடந்த ஒரு மாதமாக கண்காணித்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கொச்சியில் உள்ள தங்களது அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்துகின்றனர். 

திருவனந்தபுரம் யுஏஇ துண தூதரக அலுவலகத்தில் விசா ஸ்டாம்பிங் பணியை மேற்கொண்ட நிறுவனத்திற்கும் பினீஷிற்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பினீஷ் சொந்தமாக பெங்களூருவில் துவக்கிய இரண்டு போலி  நிறுவனங்கள் மூலம், தங்க கடத்தலில் கிடைத்த பணம்  ஹவாலா பணமாக மாற்றப்பட்டதா   என்ற கோணத்திலும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments