இங்கிலாந்தில் 6 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடினால் அபராதம்

0 2005
இங்கிலாந்தில் சமூக நிகழ்ச்சிகளில் 6 பேருக்கு அதிகம் கூடக்கூடாது என்ற புதிய கடுமையான கட்டுப்பாட்டை விதிக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார்.

இங்கிலாந்தில் சமூக நிகழ்ச்சிகளில் 6 பேருக்கு அதிகம் கூடக்கூடாது என்ற புதிய கடுமையான கட்டுப்பாட்டை விதிக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார்.

கொரோனா தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதை அடுத்து வரும் திங்கள் கிழமை முதல் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

நண்பர்கள் அல்லது குடும்ப சந்திப்புகளில் இந்த எண்ணிக்கையை மீறினால் முதலில் சுமார் 9500 ரூபாயும், அடுத்தடுத்து மீறினால் அதிகபட்சமாக 3 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படும்.  இதற்கான சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

பள்ளிகள், வேலையிடங்கள்,கொரோனா பாதுகாப்புடன் நடக்கும் திருமணங்கள், இறுதிச்சடங்குகள் ஆகியவற்றுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments