லடாக் எல்லைப் பகுதியில் படைவீரர்களைக் குவிக்கும் சீனா

0 19408
மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் நோக்கில் லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீன ராணுவம் படைவீரர்களைக் குவித்து வருகிறது.

மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் நோக்கில் லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீன ராணுவம் படைவீரர்களைக் குவித்து வருகிறது. சீனா ராணுவத்திற்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவமும் தயார் நிலையில் உள்ளது.

லடாக் எல்லையில் சீனப் படையினரை விலக்கிக் கொள்ளவும், முன்பிருந்த நிலையைப் பராமரிக்கவும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஒருபுறம் பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கும் போதே எல்லையில் சீன ராணுவம் தனது திட்டப்படி படைவீரர்களைக் குவித்து வருகிறது.

லாடக்கில் உள்ள ரிசின் லா, ரிசெங் லா என்ற இரு கணவாய்களை கடந்த மாதம் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் இந்திய ராணுவம் கைப்பற்றியது.

அங்கிருந்தபடியே சீனாவில் மால்டோ ராணுவ முகாமை கண்காணிக்க முடியும், என்பதால் இந்திய ராணுவம் அந்த கணவாய்களை தனது பிடியில் எடுத்துக் கொண்டுள்ளது.

இதனை இழந்துள்ள சீன ராணுவம் மீண்டும் அவற்றை கைப்பற்றும் நோக்கில், படைகளை நகர்த்தி வருகிறது.
கடந்த 1 ஆம் தேதி அன்று ரெசின் லா அருகே ராணுவத்தினரை குவித்த சீனா, ஸ்பங்கூர் ஏரி அருகே மேலும் இரு படை அணிகளை நிறுத்தி வைத்துள்ளது.

இது தவிர சாசூலில் ஒரு கனரக பீரங்கி படை பிரிவையும், பெங்காங்கின் மேற்கு பகுதியில் ஒரு பீரங்கி படை பிரிவையும் சீனா நிறுத்தி உள்ளது.

அத்துடன் Spangur Gap என்ற இடத்திலும் பீரங்கி படை சீனா தயார் நிலையில் வைத்துள்ளது.
கடந்த 7-ஆம் தேதி அன்று முக்ரி பகுதியில் எல்லை கடந்து அத்துமீற முயன்ற சீன ராணுவத்தின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.

இதுபோன்ற ஊடுருவல் முயற்சியும், மிகப்பெரிய தாக்குதலும் வரும் நாட்களில் நிகழக்கூடும் என்பதை எதிர்பார்த்தே இந்திய ராணுவம் உஷார் நிலையில் உள்ளது.

எல்லை கட்டுப்பாடு கோடு நெடுகிலும் இந்திய ராணுவமும் பீரங்கி படைகளை நிறுத்தி உள்ளதோடு, ராணுவ படை பிரிவுகளையும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பரந்து விரிந்த சமவெளி பிரதேசம் உள்ளதால்,அங்கு பீரங்கிகளையும் கனரக வாகனங்களையும் எளிதாக இயக்க முடியும். இதனால் இரு நாட்டு ராணுவமும் பெரிய தாக்குதலில் ஈடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments