நீட் தேர்வு பயிற்சி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை

0 2473
அரியலூர் அருகே நீட் தேர்வு பயிற்சி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் அருகே நீட் தேர்வு பயிற்சி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விசுவநாதனின் மகனான விக்னேஷ்,   துறையூரில் உள்ள ஒரு தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார்.கடந்தாண்டு தேர்வில் தோல்வியை தழுவியதால்,  2ஆவது  முறையாக பயிற்சி பெற்று வந்தார்.

வரும் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிணற்றில் சடலமாக விக்னேஷ் மிதப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சடலத்தை மீட்டனர்.

இதனிடையே, நீட் தேர்வை தடை செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் பாமகவினர்  சுமார் 100 பேர் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில்  போராட்டத்தில் ஈடுபட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments