சிங்கப்பூர் நிறுவனங்கள் கொரோனாவால் ஆட்குறைப்பு செய்வதால் நாடு திரும்பும் ஏராளமான இந்தியர்கள்
சிங்கப்பூரில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதால், மீண்டும் 11 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் வேலையிழந்து நாடு திரும்பகிறார்கள்.
இதுகுறித்து சிங்கப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தூதரக அதிகாரி பி.குமரன், கடந்த மே மாதம் முதல் 17,000 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்றார்.
தற்போது வேலையிழந்து நாடு திரும்புவதற்காக 11,000 பேர் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார். வந்தேபாரத்' திட்டத்தின் படி, சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அவர், வேலை இழந்து தவிக்கும் இந்தியர்கள் இந்த விமானங்கள் மூலம் தாய்நாடு திரும்பலாம் என்றார். தேவைப்பட்டால் மேலும் சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் குமரன் தெரிவித்தார்.
Comments