திருச்சியில் வாலிபரிடம் பைக் பறிப்பு... நிச்சயம் செய்த காதலனுடன் சிக்கிய கல்லூரி மாணவி!

0 30870
கைது செய்யப்பட்டுள்ள ரகமத் நிஷா மற்றும் அவரது நண்பர்கள்

பேஸ்புக்கில் பழகி கடலூர் வாலிபரைத் திருச்சிக்கு வரவழைத்துத் தாக்கி,  பைக்கைப் பறித்த வழக்கில், நிச்சயம் செய்யப்பட்ட காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அங்குசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் டிசைனிங் மற்றும் பிரிண்டிங் பிரஸ் தொழில் செய்து வருகிறார்.  இவருக்குத் திருமணமாகி குழந்தை உள்ளனர். எப்போதும் ஆன்லைனில் பொழுதைக் கழித்து வரும் வினோத்குமாருக்கு ஒரு வருடத்துக்கு முன்பு திருச்சியைச் சேர்ந்த ரகமத் நிஷா எனும் கல்லூரி மாணவி ஃபேஸ்புக்கில் பழக்கமானார். இந்த நிலையில்,  மூன்று மாதங்களுக்கு முன்பு நிஷா பேசுவதை நிறுத்திவிட்டார். திடீரென்று பத்து நாள்களுக்கு முன்பு மீண்டும் பேசிய நிஷா, “நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ இல்லாமல் நான் இல்லை. உன்னைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை” என்று கூறியவர் கவர்ச்சிகரமான செல்பி படங்களையும் எடுத்து அனுப்பியுள்ளார். வினோத்குமாரை திருச்சிக்கு வருமாறு ரகமத் நிஷா கூறியுள்ளார். 

image

கடந்த 5 - ம் தேதி, தன் பேஸ்புக் காதலியைப் பார்க்க திருச்சிக்குப் புறப்பட்டார் வினோத்குமார். திருச்சியில் காதலியைத் தேடிச் சென்ற வினோத்குமாரை நான்கு பேர் கடத்தி, அடித்து உதைத்து  நிர்வாண  படம் எடுத்து ஒரு லட்சம் கேட்டு மிரட்டினர். வினோத்குமாரிடம் அவ்வளவு பணம் இல்லாததால் அவரின் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கைப் பிடுங்கிக்கொண்டனர்.

ஏமாற்றப்பட்டதையடுத்து கே.கே நகர் போலீசாரிடம் புகார் அளித்தார் வினோத் குமார். காவல் துறை அதிகாரிகள்  “நீங்கள் கேட்ட பணத்தை ஏற்பாடு செய்துவிட்டேன். என் பைக்கை திருப்பிக் கொடுங்கள்” என்று அந்த கும்பலிடத்தில் கூறும் படி கூறியுள்ளனர். இதையடுத்து, மாணவி ரகமத் நிஷா உள்பட மூன்று பேர் பணத்தை வாங்க வந்தபோது , காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட திருச்சி காஜாமலையைச் சேர்ந்த ரகமத் நிஷா, வள்ளுவர் நகரைச் சேர்ந்த ஆசிக் எனும் நிவாஷ், பாலக்கரையைச் சேர்ந்த முகம்மது யாசர் ஆகிய மூன்று பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய நிஷாவும், அன்சாரி என்பவனும் மூன்று வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். அவர்களுக்கு இந்த மாதம் 3 - ம் தேதிதான் நிச்சயதார்த்தம் வேறு நடந்துள்ளது. காதலன் அன்சாரி தன் காதலி நிஷாவை பேஸ்புக் சபலங்களுடன் பழக வைத்துள்ளான். நிஷா அன்சாரி சொல்லும் வாலிபர்களுடன் பழகி, நட்பு பாராட்டி காதல் ஆசை வளர்ப்பார். பிறகு, ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி வைப்பார். பிறகு,  ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்... நீ இல்லாவிட்டால் என்னால் வாழமுடியாது’ என்று ஆசை வார்த்தை கூறி நேரில் வரவழைப்பார். நேரில் வருபவர்களை அடித்துத் தாக்கி, பணம் பொருள்களைப் பறித்து வந்துள்ளனர். 

காதலி நிஷா இப்போது போலீசிடம் சிக்கி கம்பியெண்ணும் நிலையில் தப்பியோடிய காதலன் அன்சாரி உள்பட மூன்று பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்...

பேஸ்புக்கில் பெண்ணுடன் பழக்கம்... சபலத்துடன் திருச்சி சென்ற கடலூர் இளைஞருக்குக் கிடைத்த அதிர்ச்சி வைத்தியம்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments