கர்நாடகாவில் கொரோனா நோயாளிகளை விரைந்து அழைத்துச் செல்ல ஏர் ஆம்புலன்ஸ் சேவை
கர்நாடகாவில் கிராமப்புறங்களில் உள்ள கொரோனா நோயாளிகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வகையில் ஏர் ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடியூரப்பா தொடங்கி வைத்தார்.
கிராமப்புறங்களில் வசிக்கும் நோயாளிகளுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காமல், உரிய நேரத்தில் சிகிச்சையின்றி நோயாளிகள் உயிரிழப்பதாக கூறப்பட்ட நிலையில், அதனை தடுக்கும் விதமாக ஏர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பெங்களூர் ஜக்கூர் பயிற்சி விமான நிலையத்தில் ஏர் ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடியூரப்பா ஏர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
Comments