கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளில் பெய்த மழையால் அணைகளில் நீர் மட்டம் உயர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
தாமிரபரணி, கோதையாறு, பழையாறு ஆகியவற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது.
தென் கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கேரளத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 30 அடியாகவும், 77 அடி உயரமுள்ள பெருஞ்சாணி அணையில் நீர் மட்டம் 61 அடியாகவும் உயர்ந்துள்ளது.
குழித்துறை தாமிரபரணி தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
Comments