கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

0 1489
கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கேரளா தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக கோவையில் நகை பட்டறை உரிமையாளரின் வீடு மற்றும் பட்டறையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கேரளாவுக்கு கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கோவை கருப்ப கவுண்டர் வீதியை சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் நந்தகோபால் என்பவரது வீடு மற்றும் நகை பட்டறையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

டிஎஸ்பி சாகுல் அமீது தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவிலிருந்து நந்தகோபாலின் நகை பட்டறைக்கு தங்கம் கை மாற்றப்பட்டதா? விற்கப்பட்டதா? என்ற கோணங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments