பாலியல் பலாத்கார வழக்கில் எம்.எல்.ஏவுக்கு எதிரான விசாரனையில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் கடமை தவறியதாக சிபிஐ குற்றாசாட்டு
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோ பாலியல் பலாத்கார வழக்கில் எம்.எல்.ஏவுக்கு எதிரான புகார் மீது உரிய விசாரணை நடத்தவில்லை என்று 3 ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
மூன்று பெண் அதிகாரிகள் அலட்சியத்தால் கடமையை தவறியதாக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
2017ம் ஆண்டு சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, அவர் தந்தை அடுத்த ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ மேற்கொண்டது. இதையடுத்து முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் கடந்த 2019ம் ஆண்டில் டெல்லி நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கடமை தவறிய அதிகாரிகள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு சிபிஐ பரிந்துரை செய்துள்ளது.
Comments