ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடி- 50 பேர் கைது
நாடு முழுவதும் சட்டவிரோதமாக மென்பொருளைப் பயன்படுத்தி போலி ரயில் டிக்கட் பதிவு செய்ததாக 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ரேர் மாங்கோ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி பிட்காய்ன்ஸ் மூலமாக கட்டணத்தைப் பெற்று போலியாக ரயில் டிக்கட் புக்கிங் செய்ததாக மேற்குவங்கத்தைச் சேர்ந்த 5 முக்கிய குற்றவாளிகள் உட்பட 50 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய ரயில் டிக்கட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. பயணிகள் ரயில் போக்குவரத்துத் தொடங்கியதும் போலி டிக்கட் விற்பனை அதிகரித்ததையடுத்து அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டதில் மென்பொருளைப் பயன்படுத்தி ஆன்லைனில் ரயில்வே முன்பதிவு செய்யும் கும்பல் பயணிகளை மோசடி செய்தது அம்பலமானது.
Comments