இரண்டே ஆண்டுகளில் இந்தியாவின் மறுசுழற்சி எரிசக்தி ஆற்றல் அதிகரிக்கும் - பிரதமர் மோடி

0 1384
இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் 220 ஜிகாவாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் 220 ஜிகாவாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் வசதி அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது ஒட்டு மொத்த மனித குலத்திற்கே மிகப்பெரிய மாற்றத்தையும் பயனையும் தரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொழில் நுட்ப வளர்ச்சியால் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.

உலக சூரிய எரிசக்தி தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரை நிகழ்த்த இருந்த நிலையில் பிரதமரின் இதரப் பணிகளால் அவரால் அந்த மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை.

ஆயினும் பிரதமர் மோடியின் அறிக்கையை புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மாநாட்டில் வாசித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments