பிரெக்சிட் வர்த்தக உடன்படிக்கைகளில் நீளும் இழுபறி... உடன்படிக்கை எட்டப்படவில்லை என்றால் பிரிட்டனுக்கு லாபம்-போரிஸ் ஜான்சன்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு பிந்தைய வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாவிட்டால், பேச்சுவார்த்தைகளில் இருந்து பிரிட்டன் வெளியேறும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
வர்த்தக பேச்சுவார்த்தைகள் இன்றி வெளியேறுவது பிரிட்டனுக்கு சாதகமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரெக்சிட் காலகட்டம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
அதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்படவில்லை என்றால், இரு நாடுகளுக்கும் இடையே வரிவிதிப்புகளும், பொருளாதார தடைகளும் ஏற்படும்.
இதனால் சுமார் ஒரு டிரில்லியன் டாலர் அளவு வர்த்தகம் குறித்து இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவாகும். இதனால் ஏற்படும் நெருக்கடி ஒருபுறம் இருக்க, பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
பிரதமர் போரிஸ் ஜான்சனின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசின் சட்டத்துறை தலைவர் பதவி விலகி உள்ளார். கடந்த ஜனவரி 31 ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியது.
Comments