கங்கனாவின் திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலக கட்டிடத்தில் மும்பை மாநகராட்சி நோட்டீஸ்

0 3317

இந்தி நடிகை கங்கனா ரணாவத்தின் திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலக வளாகத்தில் சட்டவிரோதமாக கட்டிடம் கட்டப்பட்டிருப்பதாக கூறி, மும்பை மாநகராட்சியால் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

மேற்கு பாந்திராவின் பளிஹில்ஸ் பகுதியில் கங்கனாவின் மனிகர்ணிகா பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அக்கட்டிட வளாகத்தில் சட்டவிரோதமாக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக கூறி, அதுகுறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கமளிக்கக்கோரி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.

மும்பையை மினி பாகிஸ்தான் என விமர்சித்ததால் கங்கனா, மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா இடையே கருத்து மோதல் நிலவும்நிலையில், அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments