லடாக் எல்லையில் ஆபத்தான நகர்வுகளை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் - சீனா
தங்களது வீரர்களை எச்சரிக்கும் விதத்தில் இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா குற்றம்சாட்டி இருக்கிறது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜவோ லிஜியான், மோதல் விவகாரம் குறித்து சீன தலைநகர் பீஜிங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், இந்திய வீரர்கள் சட்டவிரோதமாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி வந்து, பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரைப்பகுதியில் நுழைந்ததாக கூறினார். எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சீன வீரர்களை எச்சரிக்கும் விதமாக இந்திய வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
நிலைமையைச் சமாளிக்கும் விதமான நடவடிக்கைகள் எடுக்க சீன வீரர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்திய வீரர்கள் இருதரப்பு ஒப்பந்த விதிமுறைகளை மீறியுள்ளனர் என்றும், இது சீன ராணுவத்தை மிகவும் ஆத்திரமூட்டும் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய ஆபத்தான செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அத்துமீறி நுழைந்த இந்திய வீரர்கள் மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டும் ராஜ்ஜிய மற்றும் ராணுவம் தரப்பிலான பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Comments