முதன்முறையாக காணொலி காட்சி மூலம் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டம்
திமுக பொதுக்குழு கூட்டம் முதன்முறையாக காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான செய்முறை விளக்கம் நடத்தப்பட்டது.
நாளை காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 3500க்கும் மேற்பட்டோர் காணொலி மூலம் பங்கேற்க உள்ளனர்.
இதனால் மாவட்ட வாரியாக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை சமூக இடைவெளியுடன் ஒருங்கிணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சிரமமின்றி கருத்துகளை பரிமாறிக்கொள்ள முடிகிறதா என்பன உள்ளிட்டவற்றை ஆராயும் வகையில் இன்று செய்முறை விளக்க கூட்டம் நடத்தப்பட்டது.
காலை 9 மணிக்குள் அரங்கிற்குள் கையெப்பமிட்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments