கட்டாய கல்வி உரிமை சட்ட இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1606
கட்டாய கல்வி உரிமை சட்ட இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது எனவும், நிரப்பப்படாத இடங்களின் விவரங்களை பள்ளிவாரியாக வெளியிட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்ட இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது எனவும், நிரப்பப்படாத இடங்களின் விவரங்களை பள்ளிவாரியாக வெளியிட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, RTE இடங்களுக்கான கால அட்டணவனை வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அரசின் அறிவிப்பு மக்களிடம் சென்றடையவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், அரசின் கால அட்டவணையை, தலா ஒரு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் வெளியிடவும், அதில் கண்காணிப்பு குழு அதிகாரிகள் குறித்த விவரங்களையும் வெளியிடவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments