போதைப்பொருள் சப்ளை கும்பலுடன் தொடர்பு: நடிகையும் நிக்கி கல்ராணியின் சகோதரியுமான சஞ்சனா கைது

0 4857
போதைப்பொருள் சப்ளை கும்பலுடன் தொடர்புடையதாக எழுந்த புகாரில், பெங்களூரில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் சப்ளை கும்பலுடன் தொடர்புடையதாக எழுந்த புகாரில், பெங்களூரில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில், தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள நடிகை ராகினி திவேதி உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகை ராகினி திவேதி போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும், ஒரு காதல் செய்வீர் படத்தில் அறிமுகமாகி, பின்னர் கன்னட படங்களில் நடித்து வரும் நடிகையுமான சஞ்சனா கல்ராணிக்கும் தொடர்பிருப்பதாக புகார் எழுந்த நிலையில் பெங்களூரு மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து, சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments