கொலம்பியாவில் பொருளாதார, சமூக கொள்கைக்கு எதிராக முக்கிய வீதிகளின் வழியே வாகன அணிவகுப்பு

0 784
கொலம்பியாவில் பொருளாதார, சமூக கொள்கைக்கு எதிராக முக்கிய வீதிகளின் வழியே வாகன அணிவகுப்பு

கொலம்பியா தலைநகர் பொகோட்டாவில் அரசுக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் வாகனங்களில் அணிவகுப்பு நடத்தினர்.

அந்நாட்டில் கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ள நிலையில், கொரோனா தொற்றால் 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வேலைவாய்ப்பின்மை கிட்டதட்ட 25 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், அதிபர் இவான் டியூக்கின் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளை எதிர்த்து தொழிற்சங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கார்கள், இருசக்கர வாகனங்கள், சைக்கிள்களில் பச்சை பலூன்களை பறக்கவிட்டு முக்கிய வீதிகளின் வழியே ஏராளமானோர் பேரணியாக சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments