பல்கலை., கல்லூரிகளில் அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அரியர் மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தாக்கல் செய்த மனுவில், 25 சதவீத மதிப்பெண்ணுக்கு கீழ்வாங்கி தோல்வி அடைந்தவர்களும், 25 பாடங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்களையும் பாஸ் ஆக்கினால் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என கூறியுள்ளார்.
சிண்டிகேட், செனட், அகாடமிக் கவுன்சில் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு நடைமுறைகளில் அரசு தலையிட்டு அரியர் மாணவர்களையும் தேர்ச்சி அடைய செய்தது என்பது தவறு என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.
அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பை ரத்து செய்யக் கோரி ஏற்கெனவே தொடரப்பட்டுள்ள வழக்குடன் இந்த வழக்கும், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.
Comments