ஜெயராஜ்,பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - சிபிஐ

0 63631
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டே சாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - சிபிஐ

சாத்தான்குளம் தந்தை, மகன் மீது காவல்துறையால் பொய் வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவத்தன்று அவர் காவல் நிலையத்தில் இல்லை என்றும், சிபிஐ விசாரணையும் மேற்கொள்ளாமல், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது சிபிஐ தரப்பில், 45 பேரிடம் விசாரணை நடத்தபட்டதாகவும், தந்தை, மகன் மீதான தாக்குதல் ஸ்ரீதர் கவனமின்றி நடைபெற வாய்ப்பில்லை எனவும் கூரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை குறிப்பை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments