ஊரடங்கால் வேலையிழந்ததால் கஞ்சா விற்பனை செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் உள்ளிட்ட மூவர் கைது

0 3463

சென்னையில் ஊரடங்கால் வேலையிழந்ததால் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சாப்ட்வேர் என்ஜினியர் உள்ளிட்ட நண்பர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.

சிட்லப்பாக்கத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சரண்ராம், மருத்துவ விற்பனையாளர் ஆலன், நட்சத்திர ஹோட்டல் ஊழியர் மனோஜ் ஆகியோர், ஊரடங்கால் வேலையிழந்துள்ளனர்.

கைநிறைய சம்பளத்துடன் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தவர்கள் வருமானமின்றி தவித்த நிலையில், ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்தனர்.

குரோம்பேட்டை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த மனோஜின் பைக்கை நிறுத்தி சோதனையிட்ட போது சீட்டுக்கு அடியில் இருந்த கஞ்சா பார்சல்களை பறிமுதல் செய்தனர். மேலும் சரண்ராம், ஆலன் ஆகியோரின் வீடுகளிலிருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments