மற்ற விமானங்களை விட எரிபொருள் குறைவாகச் செலவாகும் வி வடிவ விமானத்தின் மாதிரி சோதனை ஓட்டம்
மற்ற விமானங்களை விட எரிபொருள் குறைவாகச் செலவாகும் வி வடிவ விமானத்தின் மாதிரி, பரிசோதனை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
புரோட்டோடைப் என்ற வகையைச் சேர்ந்த இந்த விமானத்தின் மாதிரி ஜெர்மனியில் உள்ள விமானதளத்தில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. 10 அடி அகலமும், 22 கிலோ எடையும் கொண்ட இந்த மாதிரி விமானத்தை டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் கே எல் எம் விமான நிறுவனமும் வடிவமைத்துள்ளன.
மற்ற விமானங்களைப் போல அல்லாமல் இந்த விமானத்தில் இறக்கைப் பகுதியில் பயணிகள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
ஜன்னலுக்கு வெளியே பார்க்கும் பயணிகள் விமானத்தின் மற்ற பாதியைக் காணமுடியும் என்பது இதன் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த விமானத்தின் மாதிரி சோதனை ஓட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்டது.
Comments