கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகளுக்கு வழங்கும் பணியை யுனிசெப் அமைப்பு முன்னின்று மேற்கொள்ள இருக்கிறது
மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கி பல்வேறு நாடுகளுக்கும் வழங்கும் பணியை யுனிசெப் அமைப்பு முன்னின்று மேற்கொள்ள இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப், உலக அளவில் குழந்தைகளின் நல்வாழ்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டு வருகிறது.
உலக அளவில் இந்த அமைப்புதான் ஒவ்வொரு ஆண்டும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவில் போலியோ சொட்டு மருந்து போன்ற தடுப்பு மருந்துகளை வாங்கி நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கி வருகிறது.
தற்போது கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 25-க்கு மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
அந்த நாடுகளிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கி 170-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சப்ளை செய்யும் மிகப்பெரிய பணியை யுனிசெப் முன்னின்று மேற்கொள்ள இருப்பதாக அதன் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா போரே தெரிவித்து உள்ளார்.
Comments