சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை வழக்கு - குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பு
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை தொடர்பாக 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக அந்நாட்டு நீதிமன்றம் குறைத்துள்ளது.
தங்கள் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டதாக ஜமால் கசோக்கியின் மகன்கள் கூறியதைத் தொடர்ந்து, இந்த தண்டனைக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவுதி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஜமால் கசோக்கி அந்நாட்டு இளவரசரை விமர்சனம் செய்து செய்தி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து துருக்கி கடத்திச் செல்லப்பட்ட அவர் சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டு அவர் உடல் அமிலத்தில் கரைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
Comments