நடப்பாண்டில் 14 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் - SBI

0 3171
நடப்பாண்டில் சுமார் 14 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிடங்களை நிரப்ப உள்ளதாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் சுமார் 14 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிடங்களை நிரப்ப உள்ளதாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு, விருப்ப ஓய்வு வழங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு, மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊழியர்களுடன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி நட்பு பாராட்டுவதாகவும், வாடிக்கையாளர்களுக்கான தங்களது சேவையை மேம்படுத்தும் நோக்கில், நடப்பாண்டில் 14 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments