கொரோனா நெகடிவ் சான்றிதழ் தருவதாகக் கூறி செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்த இளநிலை சுகாதார ஆய்வாளர் கைது
கேரளாவில் கொரோனா நெகடிவ் சான்றிதழ் தருவதாகக் கூறி செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக, இளநிலை சுகாதார ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதுடைய பெண் ஒருவர் மலப்புரத்தில் இருந்து குளத்துப்புழாவுக்கு வீட்டில் தங்கி செவிலியர் பணிபுரிய சென்றுள்ளார். இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அவருக்கு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபப்ட்ட நிலையில், தொலைபேசி எண்ணை கொடுத்து தனது வீட்டிற்கு வந்து சான்றிதழை பெற்று கொள்ளும்படி இளநிலை சுகாதார ஆய்வாளர் பிரதீப் கூறியுள்ளார்.
இதனை நம்பி, ஆய்வாளர் வீட்டிற்கு சென்றபோது அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, செவிலியர் அளித்த புகாரின் பேரில் பிரதீப் கைது செய்யப்பட்டார்.
Comments