1650 ஏக்கர் காப்புக்காடுகளை தத்தெடுத்த பாகுபலி நடிகர்

0 4919
1650 ஏக்கர் காப்புக்காடுகளை தத்தெடுத்த பாகுபலி நடிகர்

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் 2 கோடி ரூபாய் கொடுத்து காப்புக் காடுகளை தத்தெடுத்துள்ளார்.

பாகுபலி மூலம் உலகப் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ். இவர் ஹைதராபாத் அருகே ஆயிரத்து 650 ஏக்கர் பரப்பளவில் உள்ள காசிப்பள்ளி காப்புக்காடுகளை தத்தெடுப்பதாக அறிவித்தார்.

இதற்காக அவர் 2 கோடி ரூபாய்க்கான காசோலையை தெலுங்கானா வனத்துறை அமைச்சர் அல்லோலா இந்திர கரண் ரெட்டி, மாநிலங்களவை எம்.பி. ஜோகினபள்ளி சந்தோஷ்குமார் ஆகியோரிடம் வழங்கினார்.

சந்தோஷ் குமார் எம்பியின் பசுமை இந்தியா சவாலை ஏற்று வனப்பகுதியைத் தத்தெடுத்ததாக பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments