ஐ.சி.ஐ.சி.ஐ. முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் கைது

0 1860
பணமோசடி வழக்கு தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, சாந்தா கோச்சாரின் கணவர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பணமோசடி வழக்கு தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, சாந்தா கோச்சாரின் கணவர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

விடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் முறைகேடாக நடந்துகொண்டதாக, ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் மற்றும் வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது கடந்த ஆண்டு குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான விசாரணைக்கு தீபக் மற்றும் சாந்தா கோச்சார் நேற்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகினார். அப்போது, விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்காததால் தீபக் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், டெல்லியில் உள்ள பணமோசடி தடுப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments