எல்ஐசி நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்
எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளில் 25 சதவீதம் வரை விற்று நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வருவாய் பற்றாக்குறையை சமாளிக்கும் விதத்தில், ஆயுள் காப்பீடு துறையில் முன்னணியில் இருக்கும் அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் ஐபிஒ முறையில் முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட உள்ளன.
சிறு முதலீட்டாளர்கள், எல்ஐசி ஊழியர்களுக்கு பங்கு விலையில் 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கவும், போனஸ் பங்குகள் வழங்கவும் திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்காக எல்ஐசி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments