கொரோனாவால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு உரிய சிகிச்சைக் கட்டணம் வழங்க முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 2712
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் - ஓய்வூதியதாரர்களுக்கு உரிய சிகிச்சைக் கட்டணங்களை, மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் கட்டாயமாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கட்டணங்களை வழங்க மறுக்கும் நிறுவனங்களைத் தமிழக அரசு தகுதி நீக்கம் செய்யும் என எச்சரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் கட்டணங்களை ஏற்காததால், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தாங்க முடியாத வேதனைக்குள்ளாகிறார்கள் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments