ஹைஷென் புயலால் வடகொரியாவின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின
ஜப்பானை புரட்டிப்போட்ட ஹைஷென் புயல், கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. மேசக் புயலை தொடர்ந்து 2 வாரங்களுக்குள் தாக்கிய 2வது சக்தி வாய்ந்த ஹைஷென் புயலால், ஜப்பான் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் கொரிய தீபகற்பம் நோக்கி ஹைஷென் புயல் நகர்ந்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
வடகொரியாவின் வொன்சனில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்ததில் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. கும்காங் கவுண்டியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலம் சேதமடைந்தது.
இதே போல், தென்கொரியாவின் புசன் என்ற இடத்தில் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக நிலச்சரிவில் ஏற்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், கார்கள் தண்ணீரில் மூழ்கின.
Comments