எத்திஹாட் விமானத்தில் பயணம் செய்த 31 நாட்களில் கொரோனா வந்தால் 1.31 கோடி ரூபாய் இழப்பீடு
தங்களது விமானங்களில் பயணம் செய்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அதற்கான மருத்துவ செலவு, குவாரன்டைன் செலவு ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதாக அபுதாபியின் எத்திஹாட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனாவால் சேவைகள் முடங்கி வருவாய் இழப்புக்கு ஆளாகி உள்ள விமான நிறுவனங்களில் ஒன்றான எத்திஹாட், மக்களை கவர்ந்து வர்த்தகத்தை பெருக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, எத்திஹாட் விமானங்களில் பயணம் செய்த 31 நாட்களுக்குள் கொரோனா தொற்று ஏற்பட்டால், மருத்துவ செலவுகளுக்காக சுமார் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாயும், குவாரன்டைனுக்காக 14 நாட்களுக்கு தினசரி 8687 ரூபாயும் கிடைக்கும் வகையில் காப்பீடு வழங்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதைப் போன்ற ஒரு காப்பீட்டுத் திட்டத்தை துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவனம் கடந்த ஜூலை மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Comments