நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற அனைவரும் உடற்பயிற்சி, யோகா செய்ய நேரம் ஒதுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்காக, உடற்பயிற்சி, யோகா செய்ய அனைவரும் நேரம் ஒதுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், நாளை முதல் அனைவரும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதற்கு உறுதி எடுத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, கருணாநிதி நினைவுநாளை யொட்டி நடத்தப்பட்ட விர்சுவல் மாரத்தான் போட்டியில் பதிவுக் கட்டணம் மூலம் வசூலான 23 லட்ச ரூபாய், மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த பணம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக நாளை காலை தமிழக அரசிடம் வழங்கப்படும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.களப்பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் அவர் வழங்கினார்.
Comments