கொரோனா தொற்று தடுப்பு மருந்துகளை காட்சிப்படுத்தியது சீனா

0 6845
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான மருந்துகளை, முதன் முறையாக சீனா காட்சிப்படுத்தி இருக்கிறது. சினோவக் பயோடெக் மற்றும் சினோபார்ம் என்ற இரு சீன நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள மருந்துகள், பீஜிங்கில் நடைபெற்று வரும் வர்த்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

இன்னும் சந்தையில் விற்பனைக்கு வராத நிலையில், 3 கட்ட பரிசோதனைகள் முடிந்து நடப்பு ஆண்டின் இறுதிக்குள் மருந்து விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு 30 கோடி டோஸ் மருந்து தயாரிக்கும் விதத்தில் ஆலையை கட்டி முடித்துள்ளதாக சினோவக் நிறுவன பிரதிநிதி தெரிவவித்தார். இரண்டு டோஸ் மருந்தின் விலை இந்திய மதிப்பில் 11 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments