ரயில்கள், ரயில் நிலையங்களில் பிச்சை எடுப்பது குற்றம் என்ற சட்டம் வாபஸ் ஆகுமென தகவல்
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்பது குற்றம் என்ற சட்டத்தை வாபஸ் பெற ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரயில்வே சட்டங்களின் படி ரயில்கள் அல்லது ரயில்வே நிலையங்களில் பிச்சை எடுத்தால் ஓராண்டு சிறை தண்டனையுடன் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வழிவகை உள்ளது.
ஆனால் இந்த சட்டம் பின்பற்றப்படுவதில்லை என்பதுடன் மனிதாபிமானமற்றதாகவும் கருதப்படுகிறது. இதனால் அந்த சட்டத்தை வாபஸ் பெறுவதோடு, ரயில்கள் அல்லது ரயில் நிலையங்களில் புகை பிடிப்பவர்களின் அபராதத்தை பல மடங்கு அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments