பாரத் பெட்ரோலியம் பங்குகளை வாங்கும் நிறுவனத்தில் சீன முதலீடு உள்ளதா என மத்திய அரசு ஆய்வு
பாரத் பெட்ரோலியம் பங்குகளை வாங்க விரும்பும் நிறுவனத்தில் சீனாவின் முதலீடு உள்ளதா என ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசுக்கு உள்ள 53 விழுக்காடு பங்குகளை விற்க உள்ளது. இந்தப் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவிப்போர் செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு வாங்க விருப்பம் தெரிவிக்கும் நிறுவனத்தில் சீனாவின் முதலீடு உள்ளதாகக் கண்டறியப்பட்டு அதற்குப் பாதுகாப்பு ஒப்புதல் கிடைக்காவிட்டால் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாமல் போகும்.
அதனால் விருப்பம் தெரிவித்த நிறுவனங்களின் விலைப்புள்ளியைத் திறக்குமுன் அவற்றில் சீன முதலீடு உள்ளதா என ஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
Comments