போதைப் பொருள் வழக்கில் நடிகை ராகினிக்கு மேலும் 5 நாட்கள் காவல்

0 1724
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ராகினியை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ராகினியை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வந்த அவர், இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது விசாரணைக்கு நடிகை ராகினி ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறி மேலும் 5 நாட்கள் காவலில் எடுக்க காவல்துறை தரப்பில் அனுமதி கோரியதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதனிடையே பெங்களூருவின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வரும் போலீசார், பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை கைப்பற்றியுள்ளனர். ஒரு வாரத்தில் மட்டும் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments