சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
கச்சா எண்ணெய் விலையை சவூதி அரேபியா குறைத்தது, சீனாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது ஆகிய காரணங்களால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ளது.
நுகர்வு நாடுகளின் தேவை குறைந்தததால், உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா, ஆசியாவிற்கு விநியோகிக்கப்படும் கச்சா எண்ணெயின் விலையை குறைத்துள்ளது. இதேபோல உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான சீனாவின் பொருளாதாரம் உறுதியற்ற நிலையில் இருப்பதால், மந்தகதியில் இறக்குமதியை மேற்கொள்கிறது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1.4 சதவீதம் முதல் 1.6 சதவீதம் அளவுக்கு குறைந்து, பேரலுக்கு 41.51 டாலர்கள் முதல் 42 டாலர்கள் வரை விற்பனையானது.
Comments