மீண்டும் மாவட்டங்களுக்கிடையேயான பேருந்துப் போக்குவரத்து.. மகிழ்ச்சியில் மக்கள்..!

0 2379
தமிழகத்தில் ஐந்தரை மாதங்களுக்குப் பின் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிடையே பேருந்துப் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஐந்தரை மாதங்களுக்குப் பின் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிடையே பேருந்துப் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முதற்கட்டமாக 60 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வருகையைப் பொறுத்துப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. பேருந்துகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகளை ஏற்றவும், முகக்கவசம் அணிந்தோரை மட்டுமே ஏற்றவும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்துப் பேருந்துகளிலும் கைகளைத் தூய்மை செய்யக் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. ஐந்தரை மாதங்களுக்குப் பின் மீண்டும் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments