ராஜஸ்தான் ஜோத்பூரில் சீசனுக்காக புலம்பெயர்ந்து வந்துள்ள டெமோசெல் வகை நாரைகள்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சீசனுக்காக 350 க்கும் மேற்பட்ட டெமோசெல் வகை நாரைகள் படையெடுத்துள்ளன.
சைபீரியா, அரேபியா, மங்கோலியா, ஐரோப்பா, ஆர்க்டிக் பிராந்தியங்களில் குளிர்காலம் நிலவும் போது உணவு மற்றும் தங்குமிடம் தேடி பல்வேறு வகை பறவைகள் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் கடந்து செப்டம்பர் முதல் வாரத்தில் வந்து, மார்ச் மாத இறுதி வரை தஞ்சமடைவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 6 நாட்களில் 4 திரள்களாக டெமோசெல் வகை நாரைகள் ஜோத்பூர் நீர் நிலைகளுக்கு புலம் பெயர்ந்து வந்துள்ளன. அடுத்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் வரும் என்று எதிர்பார்ப்பதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments