இந்தியாவின் ஜிடிபி சுருங்கியிருப்பது அனைவருக்கும் எச்சரிக்கை மணி-ரகுராம்ராஜன்
இந்தியாவின் ஜிடிபி சுருங்கியிருப்பது அனைவருக்கும் எச்சரிக்கை மணி என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் கூறியுள்ளார்.
முதல் காலாண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதம் அளவுக்கு சுருங்கியுள்ளது என்றும், முறைசாரா தொழில்துறைகளை கணக்கில் எடுக்கும்போது இது இன்னும் மோசமாக இருக்கக்கூடும் என அவர் கூறியுள்ளார்.
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில் 12.4 சதவீதம் அளவுக்கும், அமெரிக்காவில் 9.5 சதவீதம் அளவுக்கும் ஜிடிபி சுருங்கியுள்ளதாக ரகுராம்ராஜன் ஒப்பிட்டுக் காடடியுள்ளார்.
இதுபோன்ற சூழலில் அரசின் நிவாரணம் அல்லது உதவி என்பது முக்கியமானது என்றும், அந்த வகையில் இதுவரையில் மத்திய அரசு செய்துள்ள போதாது என்றும் ரகுராம்ராஜன் கூறியுள்ளார்.
Comments