திடீரென உடல்நலக்குறைவான பாட்டி.. தானே கார் ஓட்டிச் சென்று காப்பாற்றிய 11 வயது சிறுவன்..! இணையத்தில் குவியும் பாராட்டு
அமெரிக்காவின் இன்டியானா பொலிஸ் மாநிலத்தில் திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளான பாட்டியை, தானே கார் ஓட்டிச் சென்று காப்பாற்றிய 11 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகிறது.
பி.ஜே. ப்ரூவர்-லே என்ற சிறுவன் தனது கோ-கார்ட்டை வீட்டுக்கு அருகே ஓட்டிக்கொண்டிருந்த போது, நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவனது பாட்டி ஏஞ்சலா ப்ரூவர்-லேவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைக்கண்ட சிறுவன் உடனடியாக மெர்சிடிஸ் காரை ஓட்டி வந்து, அதில் பாட்டியை ஏற்றி பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்து காப்பாற்றினார்.
Comments