மக்கள் சென்னைக்கு திரும்பி வருவதால் கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்வது குறித்து பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊரடங்கு தளர்வால் மக்கள் சென்னைக்கு திரும்பி வருவதால், கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்வது குறித்து பரிசீலிக்க குடிநீர் வழங்கல் வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் சென்னைக்கு நாளொன்றுக்கு 1,350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், தற்போது வழங்கப்படும் 650 மில்லியன் லிட்டர் போதுமானது அல்ல என்றும், குறைந்தபட்சமாக 1,200 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், சென்னை மக்களுக்கு கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்வது குறித்து பரிசீலிக்க குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Comments