சிறப்பு ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணச் சலுகை கிடையாது என ரயில்வே துறை அறிவிப்பு

0 1907
தமிழகம் முழுவதும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குக் கட்டணச் சலுகை கிடையாது என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குக் கட்டணச் சலுகை கிடையாது என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

அனைத்து விரைவு ரயில்களிலும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 விழுக்காடும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 விழுக்காடும் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வந்தது.

இதேபோல் உடல் ஊனமுற்ற, மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுடன் செல்லும் உதவியாளர்களுக்கும் ஓரடுக்கு, ஈரடுக்கு குளிர் சாதன வசதி வகுப்புகளில் 50 விழுக்காடும், மூன்றடுக்கு குளிர்சாதன வசதி, ஸ்லீப்பர் கிளாஸ் வகுப்புகளில் 75 விழுக்காடும் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வந்தது.

இப்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிப்போருக்கு இத்தகைய எந்தக் கட்டணச் சலுகையும் கிடையாது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments