கோவையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர்

0 1670
கோவையில் கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலியான சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலியான சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பேரூர் சாலை கே.சி.தோட்டம் பகுதியில் தரைத்தளம் மற்றும் முதல்தளம் கொண்ட 40 ஆண்டுகளைக் கடந்த பழைய அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இருந்தது.

தரை தளத்துக்கும் முதல் தளத்துக்கும் முறையான தாங்கு தூண் இல்லாமல் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தக் கட்டிடம், ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பக்கத்திலிருந்த ஓட்டு வீடு மீது சரிந்து விழுந்தது.

இதில் அந்தக் கட்டிடத்திலிருந்த ஸ்வேதா என்கிற இளம்பெண்ணும் ஓட்டு வீட்டிலிருந்த கோபால்சாமி என்ற முதியவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments