போக்ஸ்வாகன் எலக்ட்ரிக் காரை ஓட்டி சோதனை செய்த டெஸ்லா சி.இ.ஓ.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், போக்ஸ்வாகனின் புதிய எலக்ட்ரிக் காரை ஓட்டிப் பார்த்து சோதனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஜிகா தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளை டெஸ்லா சிஇஓ மஸ்க் சந்தித்து பேசினார்.
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியான பிரவுன்ச்வீக் விமான நிலையத்தில் தரையிறங்கிய மஸ்க், போக்ஸ்வாகனின் நிறுவனத்தின் தலைமையகத்தில் அதன் சி.இ.ஓ. ஹெபர்ட் டைஸை சந்தித்து பேசினார்.
அப்போது ஐடி 3 மற்றும் ஐடி 4 மின்சார கார்களை மஸ்க் ஓட்டி முன்னோட்டம் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments